வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய தலைவர் எம். கலியபெருமாள், ஒன்றிய செயலாளர் பி. சின்ன ராஜா பொருளாளர் ஏ.மருதையன், தமிழ் மாநில தொழிலாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன், செயலாளர் ஜி.ரவி ஆகியோர் தலைமையில், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35 ஆயிரம் வழங்க வேண்டும், வேலையின்றி மீளாத் துயரில் வாழும் விவசாய தொழிலாளர்கள் குடும்பம் ஒன்றுக்கு பண்டிகை கால உதவித்தொகை ரூபாய் 5000 வழங்க வேண்டும், 2021 23 ஆண்டிற்கான பயிர் காப்பீடு மறு ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்தும், கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் த. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ் .எம். செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ். உதயகுமார் ஆகியோர் கோரிக்கை உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் கே. செல்வராஜ், ஜனசக்தி பொறுப்பாளர் பட்டம் சி. தட்சிணாமூர்த்தி, அகில இந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் வீ. பாக்கியராஜ், க கிளை செயலாளர் எம். கண்ணையன் மற்றும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *