மதுரை மாவட்ட ஜாக்டோ-ஜியோ மாவட்ட அளவிலான ஆலோசனைக்கூட்டம் க.நீதிராஜா தலைமையில் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பொற்செல்வன், ஜோயல்ராஜ், நவநீதகிருஷ்ணன், மாநில ஒருங்கிணைப்பாளர்முருகையன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.

28க்கும் மேற்பட்ட ஆசிரியர் – அரசு ஊழியர் – அரசு பணியாளர் அமைப்பு களின் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகள் வழங்கினர்.
மாநில ஒருங்கிணைப் பாளர் ஆ.செல்வம் நிறைவுரை யாற்றினார். ககூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நவம்பர்-1ம் தேதி அன்று நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்தில் 10ஆயிரம் ஆசிரியர் – அரசு ஊழியர் – அரசு பணியாளர்களை கலந்து கொண்டு முதல்வருக்கு கோரிக்கையை உணரச்செய்து ஆர்ப்பாட்டத்தை மாலை 5மணிக்கு தொடங்கி 6:30மணிக்கு முடிப்பது
நவம்பர் முதல் வாரத்தில் மாவட்டம் முழுவதும் வட்டார அளவில் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்துவது
நவம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி
தேதி வரை நடைபெறுகின்ற ஆசிரியர் அரசு ஊழியர் அரசு பணியாளர் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு விழிப்புணர்வு பிரசுரம் தயார் செய்து அனைத்து ஊழியர்களையும் சந்தித்து கோரிக்கையின் நியாயத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டிய கடமையும் உணர்த்துவது என்றும் நவம்பர் 25ம் தேதி மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே 20ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும்
டிசம்பர் -28ல் நடைபெறும் கோட்டை முற்றுகையில் ஒட்டுமொத்த ஊழியர்களும் கோட்டையை முற்றுகையிடுவது என முடிவெடுக்கப் பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *