தாம் பிறந்து வளர்ந்த கிராமத்தை மறந்து வெளியூரில் வசிப்பவர்கள் இடையே… பூர்வீக கிராமத்தை முன்னேற்ற நினைக்கும் கிராமத்தினர்…”


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நாடாகுடி கிராமத்தை பூர்வீகமாக கொண்டு, வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வசிக்கக் கூடியவர்கள் ஒன்று சேர்ந்து”கிரீன்நாடாக்குடி” என்ற அமைப்பை ஏற்படுத்தி, தான் பிறந்த கிராமத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.நாடாகுடி பகுதியில் முதல் கட்டமாக சாலை எங்கும் இரு பக்கமும் ஆலமரம், அரசமரம், புங்கை மரம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட வகை மரங்களை நட்டுள்ளனர்..

இதுவரை நாடாகுடி கிராமம் முழுவதும் 350 க்கும் மேற்பட்ட மரங்களை நட்பு பராமரித்து வருகின்றனர்.. மற்றும் நாடா குடியில் உள்ள சாலைகள் முழுவதும் தெரு விளக்குகளை அமைத்துள்ளனர்… மேலும் நாடாக்குடி கிராமத்தில் உள்ள நூலகத்திற்கு புத்தகங்களை வழங்கி உள்ளனர்…

நாடா குடி கிராமத்தை விட்டு வெளியூரில் தங்கி வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் இதே கிராமத்திற்கு திரும்பி வந்து குடியேறிகின்றனர். இதுகுறித்து நாடாகுடி கிராமத்தில் வாழ்ந்து வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கரன், தங்கள் கிராமமான நாடாகுடியின் வரலாறு, கோவில்கள் உருவான விதம் பற்றியும் எடுத்து கூறினார். அதேபோல பூர்வீகமாக கொண்டு வெளியூரில் பணி செய்து ஓய்வு பெற்று திரும்பிய தியாகராஜன் சொல்லும்போது… இந்த கிராமத்தில் பிறந்து சென்னை,பாம்பே மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் இணைந்து.. 350 ஆக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து, இங்கு உள்ள பழமையான சிவன்கோவில்குளத்தின் படிக்கட்டுகளை கட்டி உள்ளோம்.. மேலும் இங்கு புதிதாக தூக்கம் இருக்கும் நூல் நிலையத்திற்கு புத்தகங்களை வழங்கி உள்ளோம்.. வெளி ஊரிலும் வெளிநாட்டிலும் பணிபுரிகின்ற இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் பொருள் உதவி செய்து வருவதால்.. மேலும் எங்கள் கிராமத்திற்கு எது தேவையோ அதை செய்ய தயாராக உள்ளதாகவும் கூறினார்.. மேலும் எங்கள் கிராமத்தை போல முன்னேறுவதற்கு மற்ற கிராமங்களுக்கும் உதவி தேவைப்பட்டால் செய்து தருவதாக உறுதி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *