கும்பகோணம் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு

மேயரை உறுப்பினர்கள் முற்றுகை.

கும்பகோணம் மாநகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் தமிழழகன், ஆணையர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை மேயர் தமிழழகன் கூறியதாவது:- தாராசுரம் காய்கறி மார்க்கெட் கடை வாடகையை குறைக்கக் கோரி வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து அரசுக்கு இழப்பீடு இல்லாமலும், மக்களுக்கு பாதிப்பு இல்லாமலும் இருக்க பரிசீலனை செய்து ஒரு சதுர அடிக்கு ரூ.5 என்று இருந்ததை ரூ.3.26 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆசைதம்பி (தி.மு.க.) :- கும்பகோணம் மாநகராட்சியில்

வடகிழக்கு பருவ மழையினால் வரக்கூடிய பாதிப்புகளை சரி செய்யும் வகையில் உத்தேச மதிப்பீடு தயார் செய்து மாமன்றத்தின் அனுமதி கேட்கப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்றுவிட்டது. தற்போது கொண்டு வந்துள்ள பொருள் அடுத்த ஆண்டுக்குறியதா? என்று கேட்டார்.

இதைத்தொடர்ந்து துணை மேயர் தமிழழகன் மற்றும் உறுப்பினர்கள், கூட்டத்தில் நிறைவேற்ற அனுப்பப்பட்ட தீர்மானங்களில் 13 தீர்மானங்களை கையெழுத்திடாமல் தாமதம் செய்தது ஏன்? என கேள்வி எழுப்பினர். அதற்கு மேயர் சரவணன், 13 தீர்மானங்களையும் பரிசீலனைக்கு வைத்து உள்ளதாகவும் பரிசீலனை முடிந்த பிறகு நிறைவே
ற்றப்படும் என்றார்.
அப்போது மேயரை வெளியே செல்ல விடாமல் மாநகராட்சி உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வரை விடமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர். இத னால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முற்றுகை போராட்டத்தின் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மேயர் சரவணனிடம் தீர்மானங்களை நிறைவேற்றிதரக் கோரி கேட்டனர்.

இதனைப் பார்த்த தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் துணை மேயர், சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களே தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் என்று சொல்லும் போது மேயர் மவுனமாக இருப்பது எங்களுக்கு வியப்பை தருகிறது என்றனர்.

இதைத்தொடர்ந்து மேயர், ஆணையர், துணை மேயர் ஆகியோர் தனி அறையில் சேர்ந்து பேசி முடிவெடுத்து வருவதாக தெரிவித்தார். ஆனால் உறுப்பி னர்கள் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் பேச வேண்டும். ஏன் தனி அறையில் பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்., இதைத்தொடர்ந்து துணை மேயர், ஆணையர் 2 பேரும் விவாதித்து விட்டு வந்து தீர்மானங் களை மேயரிடம் கையெழுத்துக்காக கொடுத்தனர்.

ஆனால் அதற்கு மேயர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அந்த தீர்மானங்களை ஆணையரிடம் மனுவாக கொடுத்த னர். பின்னர் அங்கிருந்து அனைத்து உறுப்பினர்களும் கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *