திருவையாறு ஸ்ரீ ஆடல்வல்லான் நாட்டியலாயா சார்பில் சலங்கை பூஜை விழா சகாய மாதா திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர்
வி திருவள்ளுவன் ஆகியோர் தலைமை வகித்து சலங்கை பூஜை விழாவை தொடங்கி வைத்து, நடன மகளிருக்கு கேடயம் வழங்கினாா்.
தஞ்சாவூர் மாநகர மேயர் சண். இராமநாதன் முன்னிலையில ,
தஞ்சாவூர்,தமிழ்ப் பல்கலைக்கழகம்,தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், இலக்கிய துறை கலைப்புல முதன்மையர் பேராசிரியர் இளையாப்பிள்ளை,லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நடன சிகாமணி மிக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவி ரக்ஷனா, பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா பள்ளி மாணவிகள் கீர்த்தி ஹாசினி,பிரணவி, மித்ர யாழினி, வேலம்மாள் போதி வளாகம் மாணவி தனிஷா,கண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி தகஷா, திருவையாறு,அமல்ராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காசிகா, தனுஷா, புனித வளனார் உயர்நிலைப் பள்ளி மாணவி
கவிஸ்ரீ,ஸ்ரீ வித்யாஸ்ரம் வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஹர்ஷினி, இம்மாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி,மாணவி சாதனா ஆகியோரின் சலங்கை பூஜை நடைபெற்றது.

இதில் குரு திருமதி காஞ்சனா தேவி வஜ்ரவேல்னின் நட்டுவாங்கம், அவர்களின் மகன் தாமரைப் பன்னாட்டுப் பள்ளி மாணவர் கிஷோர் அவர்களை இளம் நட்டுவனாராக அறிமுகம் செய்வதில், ஸ்ரீ ஆடல்வல்லான் நாட்டியாலயா பெருமிதம் கொள்கிறது.
ராஜாஸ்ரீவர்ஷனின் வாய்ப்பாட்டு,
செந்தில்குமாரின் மிருதங்கம்,காமேஸ்வரனின் புல்லாங்குழல், நடராஜனின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை வாசுதேவன்,மஞ்சு ஆகியோர் தொகுத்து வழங்கினார்
. ஸ்ரீ ஆடல்வல்லான் நாட்டியலாயா
நிறுவனர் கலைச்சுடர் மணி வஜ்ரவேல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.இதில் பள்ளி மாணவிகளின் பெற்றோர்,உறவினர்கள் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *