நெல்லை;-

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளான, டிசம்பர் 30 அன்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக 1,94,350 டிம்பர் மரக்கன்றுகள், 88 விவசாயிகளின் 736 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட உள்ளது.

நம்மாழ்வார் இயற்கை விவசாயம், மரவளர்ப்பு மற்றும் மண்வள பாதுகாப்பிற்காக தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டவர். அவரின் சிந்தனையாலும் செயல்பாடுகளாலும் தற்போது எண்ணற்ற இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர்.

நம்மாழ்வார் ஐயா ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கம் அவரது வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறது.

நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாளான டிசம்பர் 30 அன்று இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு வகையில் அவரை நினைவு கூர்கிறார்கள். காவேரி கூக்குரல் நம்மாழ்வார் நினைவுநாளில் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நடவு செய்து கொண்டாடி வருகிறது.

டிம்பர் மரங்களை நடுவது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பாகவும் உள்ளதால், காவேரி கூக்குரல் விவசாயிகளை டிம்பர் மரங்களை சாகுபடி செய்ய தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

மேலும் அடுத்த 12 ஆண்டுகளுக்குள் தமிழக மற்றும் கர்நாடக விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடவு செய்ய செயல்பட்டு வருகிறது.

சாதாரணமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு வரப்போரங்களில் அல்லது வேலியோரங்களில் மரம் வளர்ப்பதினால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற நல்ல விலை கிடைக்கக்கூடிய டிம்பர் மரங்கள் வளர்க்க உகந்தவை. மேலும் மரங்களில் மிளகு சாகுபடி செய்வதின் மூலம் தொடர் வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது.

விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு தமிழகத்தில் மட்டும் வி 1,01,42,331 மரங்கள் நடப் ஆண்டு இதுவரை 85

கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தரமான டிம்பர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாற்றுகள் தமிழகம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட ஈஷா நாற்று பண்ணைகளால் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

மரவிவசாயத்தை ஊக்குவிக்க மரவிவசாய களப்பயிற்சியை காவேரி கூக்குரல் நடத்துகிறது. திருவண்ணாமலை, திருவாரூர், கோயம்புத்தூர், தர்மபுரி, தென்காசி, புதுக்கோட்டை மாவட்டங்களில், வரும் ஜனவரி 7ம் தேதி மண்டல வாரியான களப்பயிற்சிகள் நடக்கவுள்ளது.

இப்பயிற்சி அம்மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயியின் மரப்பண்ணயைில் நடைபெறும். இதில் பல்வேறு வல்லுநர்களும் ஈஷா களப்பணியாளர்களும் கலந்துகொண்டு மர சாகுபடி குறித்து விளக்குவார்கள். மர விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகள் அனைவரும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

பயிற்சியில் பங்கேற்க 94425 90079, 94425 90081 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். மரம் சார்ந்த விவசாயம் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கு காவேரி கூக்குரல் 80009 80009 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *