தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் உள்ள 250 பீடி தொழிலாளர்கள் காஜா பீடி கம்பெனி முன்பு போனஸ் வார வாரம் சம்பளம் வழங்கிட கோரி
ஏ ஐ சி சி டி யு பீடி சங்க தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் கிராமத்தில் உள்ள 250 பீடி தொழிலாளர்கள் காஜா பீடி கம்பெனி முன்பு 2022 ஆண்டு போனஸ் லீவு சம்பளம் வழங்கிடவும் இரண்டு வருடமாக பிஎஃப் அலுவலகத்தில் செலுத்தாத தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தை உடனே செலுத்திட கோரி தரமான இலை ஆயிரம் பீடிக்கு 700 கிராம் வழங்கிட கோரி முன்று வாரம்
சம்பளம் உடனே வழங்கிட கோரி ஏப்ரல் முதல் வழங்க வேண்டிய பஞ்சப்படி உயர்வை அரியர்ஸ் உடன் வழங்கிடவும் தன்னெழுச்சியாக மகேஸ்வரி , மாரிச்செல்வி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட பொதுச்செயலாளர் எம் வேல்முருகன் சிஐடியு பீடிச்சங்க ஒன்றிய பொருளாளர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கருப்பசாமி கிளைச் செயலாளர் முருகேசன் சிபிஎல்எம்எல்
தென்காசி மாவட்ட உறுப்பினர் வேறு
கிளைச் செயலாளர் கருப்பையா மற்றும
காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன்,
கிளை பீடி சங்க பெண் நிர்வாகிகள் தொழிலாளர்கள
காஜாபீடி கம்பெனி கிளை நிர்வாகிகளுடன
நடத்திய பேச்சுவார்த்தையில்நாளை உடனடியாக இரண்டு வார சம்பளம் வழங்கப்படும்
காஜா பீடி உரிமையாளருடன் பேசி போனஸ் லீவு சம்பளம் வழங்கப்படும் தரமான இலை வழங்கப்படும் என தகவல் சொன்னார்கள் அதை பீடி தொழிலாளர்கள் ஏற்றுக்.
கொள்ளவில்லை இரண்டு ஆண்டுகளாக பீடி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பல லட்சக்கணக்கான பணத்தை காஜா பீடி கம்பெனி நிர்வாகம் பி எஃப் அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்த பல லட்சக்கணக்கான பீடி தொழிலாளர்களின் பிஎஃப் பணத்தை உடனடியாக செலுத்திட நடவடிக்கை எடுத்திட கோரி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏஐசிசிடியு தென்காசி மாவட்ட ஜனநாயக பீடி தொழிலாளர் சங்கத்தின் சார்பாகவும் கீழப்பாவூர் காஜா பீடி தொழிலாளர்கள் சார்பாகவும் மோசடி புகார் மனு அளிக்கப்பட்டது.

புகார் மனு மீது பாவூர்சத்திரம் காவல் நிலையம் சார்பாக சிஎஸ்ஆர் ரசிது வழங்கப்பட்டது
விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் வாக்குறுதி அளித்துள்ளார்கள் வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காஜா பீடி தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்குள் போனஸ் லீவு சம்பளம் வழங்கிட வேண்டும்
காஜா பீடி கம்பெனி பீடி தொழிலாளரிடம் பிடித்தம் செய்த பிஎப் பணத்தை பிஎஃப் அலுவலகத்தில் செலுத்தாமல் மோசடி செய்வதை தடுத்து நிறுத்திட கோரியும் உடனடியாக பீடி தொழிலாளர்களின் பிஎஃப் கணக்கில் செலுத்திட வேண்டியும்
முறையிடும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *