எண்ணூர் குப்பத்தில் மீனவர்கள் சிறப்பு வழிபாடு அமோனியா பாதிப்பில் இருந்து காத்த சின்னம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கைமாறாக 1.5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான துணி நூல் மாலை அலங்காரம் செய்த ஊர் மக்கள்

திருவொற்றியூர்

எண்ணூர், நெட்டுக்குப்பம் பகுதியில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, சின்னம்மன் – சியாமளா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஆங்கில புத்தாண்டு மூலவர் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி, கடந்த ஆண்டுகளில், புடவை, சாத்துக்குடி, சோளம் அண்ணாச்சி பழம், ஸ்வீட், டீஸ்பூன், வெற்றிலை போன்ற பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சின்னம்மன் – சியாமளாதேவி கோவில் கருவறைகள், 1.5 லட்சம் செலவில், துணி நூல்களளாலான மாலை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவில் வளாகம் முழுவதும் இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்ததால், வண்ணமயமாக காட்சியளித்தது.

இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில் :
தொழிற்சாலையில் இருந்து வெளியான ஆயில் கழிவு மற்றும் அமோனியா வாயு கசிவு காரணமாக எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாமல், இடிதாங்கி அம்மன் எனப்படும் சின்னம்மன் காத்தார்.
அதற்கு, அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, பட்டத்து ராணி அலங்காலரம் செய்யப்பட்டு, திருப்பதியில் ஆண்டுக்கொரு முறை, கருட சேவையின் போது செய்யப்படும், துணி நூலால் ஆன மாலை அலங்காரம், கருவறை மற்றும் கோவில் வளாகம் முழுதும் செய்யப்பட்டுள்ளது என, கூறினார்.

இந்த நூலை நாளை பிரசாதமாக ஊர் மக்கள் அனைவருக்கும் வழங்கி அம்மனுக்கு நன்றி செலுத்துவதாகவும் தெரிவித்தனர் மேலும் இது போன்ற பேர்இடர்கள் இல்லாமல் காக்கவும் அம்மனை வேண்டுவதாகவும் தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *