திருவொற்றியூர்

எண்ணூர் பெரியகுப்பம் அருகே உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலை நுழைவாயிலின் முன்பு தொடர்ந்து ஏழாவது நாளாக போராடிவரும் மீனவர்களிடம் ஆதரவை தெரிவித்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் மற்றும் 7 வது வார்டு மாமன்ற”உறுப்பினர் கார்த்திக்
கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு என்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயுவானது வெளியேறியது

இதனை அடுத்து பெரிய குப்பம் சின்ன குப்பம் எர்ணாவூர் குப்பம் போன்ற பகுதியை சேர்ந்த மீனவர்கள் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி தொடர்ந்து ஏழாவது நாட்களாக உரத் தொழிற்சாலையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் வந்து தங்களுடைய ஆதரவை தெரிவிக்கின்றனர்

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் அதிமுக கட்சியைச் சேர்ந்த திருவொற்றியூரின்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே குப்பன் மற்றும் ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பினரான கார்த்திக் ஆகியோர் போராட்ட களத்தில் ஈடுபட்டு வரும் மீனவர் மக்களிடம் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்

மேலும் அவர்களுடைய போராட்டம் தொடர்ந்து இதே போன்று அமைதியான முறையில் நடைபெற வேண்டும் எனவும் கூறினார் மேலும் அரசும் மக்களின் கோரிக்கையை ஏற்று ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான வழிவகை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறினார்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் எடுத்துரைத்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப உள்ளதாகவும் முடிந்தால் போராட்ட களத்திற்கு அவரை அழைத்து வந்து தொழிற்சாலையை நிரந்தரமாக மூட மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் போராட்டக்காரர்களிடம் பேச்சு
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த மாநில செயலாளர் முத்தரசன்
நிறுவனங்கள் கவன குறைவாகவும் மெத்தனமாகவும் இருப்பதால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறுகிறது

அமைதியாக போராடும் மக்கள் மீது வழக்கு போடுவது சரியல்ல வழக்கை திரும்ப பெற வேண்டும் நிவாரணம் வழங்கி நிரந்தரமாக ஆலையை மூட வேண்டூம் எண்ணூர் பெரிய குப்பத்தில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை உள்ளது.

இந்த கம்பெனியில் இருந்து கடந்த சில நாட்கள் முன்பு வாய்வு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் வாந்தி மயக்கம் போன்ற நோய்கள் ஏற்பட்டது. இதனால் அந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து 7-ம் நாளான இன்று போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் மற்றும் துணைச் செயலாளர்மு.வீரபாண்டியன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் ரா.முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எண்ணூர் பெரிய குப்பத்தில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலை அமோனியா கசிவு ஏற்பட்டு ஏராளமான மக்களுக்கு மூச்சு திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் உள்நோய்களாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசு உடனடியாக கோரமண்டல் கம்பெனியில் உற்பத்தியை நிறுத்த வேண்டும் அறிவித்து உற்பத்தியும் தொடங்கவில்லை நிறுவனம் மூடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் டிசம்பர் 26 தொடர்ச்சியாக அமோனியம் வாய்வு கசிவு பல சந்தர்ப்பங்களில் வெளியேறுகிறது. மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே கோரமண்டல தொழிற்சாலையை தற்காலிகமாக மூடி உள்ளனர் அதை. நிரந்தரமாக மூட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் வேறுபாடு இல்லாமல் அனைவரும் சேர்ந்து எந்த அமைப்பு சார்ந்து இல்லாமல் தன்னச்சியாக 7 நாட்களாக அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

போராட்டத்தில் பங்கேற்பதற்காக மேற்கூரை போடுவதற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. என்ன காரணம் என்று புரியவில்லை. பெண்கள் வெயிலில் உட்கார்ந்து இருக்கிறார்கள்.

அதே மாதிரி ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும் காவல்துறை சம்மதிக்கவில்லை இத்தகைய முறைகள் சரியல்ல. அரசு அமைப்பு சட்டத்தில் ஜனநாயக முறையில் ஆயுதமற்ற முறையில் எத்தனை போராட்டத்தில், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், தர்ணா, சாலை மறியல் போன்ற போராட்டங்கள் அரசாங்கம் சட்டத்தில் அனுமதி உள்ளது.

போலீசார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பெண்கள், குழந்தைகள் போராடுவதால் இதை தமிழக அரசு மக்களுடைய இந்த கோரிக்கைகளை ஏற்று கோரமண்டல் தொழிற்சாலையை தற்காலிகமாக இல்லாமல் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு அனைவருக்கும் தெரியும். இதை பற்றி கமிட்டி அமைத்து மாவட்ட ஆட்சியர், தாசில்தார், காவல் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை கொடுக்கப்பட்ட அதிகாரிக்கு அரசு பதிவு வழங்கப்பட்டிருக்கிறது.

அது சரியல்ல பதவி கொடுத்ததே ரத்து செய்ய வேண்டும். இந்த அதிகாரிகள் அனைவரும் மீது நடவடிக்கை வேண்டும்.
என்னை கசிவு கோரமண்டல் அமோனியம் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், நிவாரணம் மட்டுமல்ல அவர்கள் கோரிக்கையும் நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்ற வேண்டும்.
அமைதியான முறையில் தான் போராடுகிறார்கள்.

உயிருக்காக போராடுகிறார்கள் தங்களுடைய பாதுகாப்பு இல்லை என்று போராடி வருகிறார்கள். காவல்துறையினர் வழக்கு போடப்பட்டது சரியல்ல. இந்த வழக்குகள் உடனடியாக வாபஸ் பெற
வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
வடசென்னை முழுவதும் வாழ்வதற்கு தகுதியான இடம் தான். தொழிலாளர் நிறைந்த பகுதி மீனவர்கள் நிறைந்த பகுதி பிரச்சனை என்னவென்றால் தனிப்பட்ட முறையில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் கவன குறைவாகவும் மக்களின் மீது அக்கறை இல்லாமலும் மெத்தனம் காட்டுவதால் இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் இயற்கை சீற்றம் மறுபக்கம் செயற்கை விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. அரசு இந்த பிரச்சனைகளை தலையிட்டு மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் ஈமேலும் மாசுகட்டுபாட்டு வாரீயம் மாசில்லாமல் இருக்க வேண்டுமெனவும் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *