விழுப்புரம் மாவட்டம் அதிமுக கண்டமங்கலம் வடக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கண்டமங்கலம் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே எம் ஜி ஆர் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல் கே கண்ணன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திரளாக தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல் கே கண்ணன் எம்ஜிஆர் புகழ்குறித்து சிறப்புரை ஆற்றினார் அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *