கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும்
கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம்.
கும்பகோணம் இஸ்லாமிய சமூக நல சங்கம் மற்றும் கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து மருத்துவ முகாம்
கும்பகோணம் அல் அமீன் பள்ளி வளாகத்தில் நடைப் பெற்றது.

முகாமிற்க்கு கிஸ்வா தலைவர் பி.எஸ்.யூசுப் தலைமை தாங்கினார்.செயலாளர் ஜாஹிர் உசேன்,
திட்ட தலைவர் சதக்கதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தாளாளர் கமாலுத்தீன்
மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
மகப்பேறு துறை டாக்டர் நித்யா குன்னோத்,குழந்தை
மருத்துவ துறை டாக்டர் அஞ்சனாராகவன்,டாக்டர்கள்
முகமது மிர்தாஸ்,ஷிஜின், ஆகியோர்
பொது மருத்துவம்,பெருமூளை வாதம்,
உடல் பருமன்,சுவாசக் கோளாறு,கருப்பை நீர்க்கட்டிகள்,கழுத்து வலி,பக்கவாதம்,நரம்பு மற்றும் முதுகெலும்பு சிகிச்சைகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில் நகர வாசிகள் மற்றும் கிராம வாசிகள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைந்தனர்.