காக்கணாம்பாளையம் பகுதியில் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ நல்லதம்பி..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் காக்கணாம்பாளையம் பகுதியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதில் திருப்பத்தூர் வட்டார கல்வி அலுவலர் கமலநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா அருணாசலம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *