மணப்பாறை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கஸ்பா பொய்கைபட்டி அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லதா தலைமையில் கஸ்பா பொய்கைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரோஸ்லின் சகாயமேரி ராஜசேகர் உதவி தலைமை ஆசிரிய பிராங்லின் சேவியர் முன்னிலையில் GHCL பவுண்டேஷன் தலைமை நிர்வாக அலுவலர் R.பாலகிருஷ்ணன் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இரண்டு கம்ப்யூட்டர்களை வழங்கினார்.

GHCLபவுண்டேஷன் முதுநிலை பொதுமேலாளர் ரமேஷ் பாபு 40நாள் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பயின்ற 41 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

GHCL நிதி பங்களிப்பாளர் சுஜின் நிகழ்ச்சியின் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் வாழ்த்துரை வழங்கினார்.

தலைவர் கிருஷ்ணவேணி பொதுச் செயலாளர் அங்குசாமி. குடும்ப நல ஆலோசகர் கதிரவன் நன்றி கூறினார். பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *