கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் இல்ல திருமண விழாவில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி பங்கேற்பு ஹேம்நாத் சோரன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றிய குழு துணை தலைவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பானு சேகர் இல்ல திருமண விழாவில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கனிவண்ணன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில்
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த்சோரன் கைது செய்யப்பட்டார் என்பதற்கு காரணம் அவர் பிரதமர் மோடி பேச்சை கேட்கவில்லை என்பதற்காகவே கைது செய்யப்பட்டார் என விமர்சனம் செய்தார்.

முதலமைச்சர் ஹேமந்த் சோரன் வீட்டில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் முதலமைச்சராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்தார் என தெரிவித்தார். ராஜ்நாத் சிங் ,நரேந்திர மோடி, அமித்ஷா, அண்ணாமலை இவர்களது வீட்டில் பத்து லட்ச ரூபாய் பணம் இல்லையா என கேள்வி எழுப்பினார்.

ஒரு முதலமைச்சர் என்பதால் பல்வேறு செலவுகளுக்காக வீட்டில் பணம் வைத்திருந்தார் 10 லட்சம் என்பது ஒரு தொகையை இல்லை அண்ணாமலையின் நடைப்பயணத்திற்காக அந்தந்த தொகுதியில் 400 முதல் 500 மீட்டர் நடை பயணத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்படுகிறது

செலவு செய்யும் பணம் எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பினார். சோரன் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் புரட்சியாளராக செயல்பட்டு வருகிறார் என்பதற்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என விமர்சனம் செய்தார். கூட்டணி குறித்து துரைமுருகன் பேசியதற்கு அந்தக் கட்சியை பதில் கூறும் என தெரிவித்தார்.

பாராளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார். கடந்த ஆண்டை காட்டிலும் அதிக தொகுதி கேட்கப்படுவதாக தெரிவித்தார்.மீண்டும் மயிலாடுதுறையில் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட தொகுதி பங்கீடு கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும் என தெரிவித்ததற்கு இதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் இந்தியா கூட்டணி இல்லை என தெரிவித்தார் மேலும் அடுத்த வருடமும் இவர்களே வந்து மத்திய பட்ஜெட் மூலம் பயமுறுத்துவார்கள் என்றால் அது நாம் அனைவரும் வருத்தப்பட வேண்டியது தான் என தெரிவித்தார்.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதி பங்கீடு கோருவதாக தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டில் 25 ஆயிரம் கோடி வறுமையை நீக்கி விட்டதாக அறிவித்தது குறித்து கேள்விக்கு அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார் பத்தாண்டு காலம் அந்தத் திட்டத்தை விரிவு படுத்தியது காங்கிரஸ். 10 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி பேர் வறுமைக் கோட்டில் இருந்து வெளியேற்றினோம் என தெரிவித்தார்

அதற்கான ஆதாரங்களை அப்போது நாடாளுமன்றத்தில் வெளியிட்டோம் என தெரிவித்தார். இந்த ஆதாரங்களை பார்த்து அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் இந்திய அரசாங்கத்திற்கு ஒரு சான்றுகளை வழங்கினார்கள் வறுமை ஒழிப்பு திட்டத்தில் சிறந்த திட்டம் என்று சான்று வழங்கப்பட்டது.

அந்த சான்றை அமைச்சரவையில் குழு சார்பாக முதலமைச்சர் மன்மோகன் சிங் மற்றும் இளந்தலைவர் ராகுல் காந்தி சென்று சான்றை பெற்றிட வேண்டும் என கருத்து கூறினார்கள் ஆனால் மன்மோகன் சிங் அமைச்சரவையில் பேசி இது காங்கிரஸின் திட்டமல்ல இந்திய அரசின் திட்டம் என தெரிவித்து இந்திய அரசியல் சார்பாக எனது நண்பர் அத்வானி அவர்கள் சென்று வாங்கி வர வேண்டும் என தெரிவித்தார்.

அத்வானி சென்று ஐநாவில் சான்றை பெற்று வந்தார் இதுதான் ஜனநாயகம் நரேந்திர மோடி அத்வானியை எந்த ஒரு நிகழ்வுக்காவது அழைக்கிறாரா என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் 15 கோடி என்று தெரிவித்ததன் காரணமாகவே பாரதிய ஜனதா கட்சி 25 ஆயிரம் கோடி வறுமையை நீக்கினும் என தெரிவித்துள்ளனர் என விமர்சனம் செய்தார்.

இதற்கான சான்று எங்கே சான்று வெளியிட வேண்டும் என கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்க மத்திய அரசு என தெரிவித்தார். வெள்ள நிவாரண நிதி தராமல் ஸ்ரீரங்கம் ராமேஸ்வரம் செல்வதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார்.

கோயில் கட்டுவதனாலோ கும்பாபிஷேகம் செய்வதாலோ யாரும் அதிகாரத்திற்கு வந்து விட முடியாது என தெரிவித்தார். நிறைய பேர் கோவில் கட்டி இருந்த பதவியே இழந்து இருக்கிறார்கள்என தெரிவித்தார். ராமரை பிடித்துக் கொண்டு இருப்பது ஆன்மீகத்துக்காக அல்ல சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை என தெரிவித்தார். மக்களுக்காக செய்ததை ஆதாரமாக வெளியிட ஒன்றும் இல்லாததால் ராமர் கோவில் வைத்து விளம்பரம் தேடுகிறார்கள் என தெரிவித்தார்.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையில் எத்தனை கோடி கருப்பு பணம் வெளியே கொண்டு வந்தீர்கள் என கேள்வி எழுப்பினார். விவசாயிகள் இரட்டைப்பு லாபம் பெறுவார்கள் என தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயம் பாதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் டீசல் 60 முதல் 70 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று உலகத்திலேயே கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையிலும் தற்போது பெட்ரோல் டீசல் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்து

இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் சாதனையா என கேள்வி எழுப்பினார் .ராமர் கோவில் விவகாரத்தில் கோபுரம் கட்டாமல் யாராவது கும்பாபிஷேகம் செய்வார்களா கிராமத்தில் கோவில் கோபுரம் கட்டாமல் கும்பாபிஷேகம் நடத்தினால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அந்த ஊருக்கு கேடு விளைவிக்கும் என எதிர்பார்கள் தெய்வ குத்தம் வந்துவிடும் என தெரிவிப்பார்கள் ஆனால்தெய்வகுத்தம் நீங்கள் ராமருக்கே செய்திருக்கிறீர்கள் என தெரிவித்தார்

ராமர் தண்டனை கொடுப்பது பூமி பிளந்து எல்லோரும் உள்ளே சென்று விடுவது தான் நடக்கும் என்பதுதான் நாம் ராமாயணத்தில் படித்துள்ளோம். இதுபோன்ற விரைவில் நடக்கும் நான் சாபமெல்லாம் விடவில்லை இந்தக் கோவிலை முழுமையாக முடித்த பின் விழா நடத்தலாமே என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *