யோகாவில் மாவட்டம், மாநிலம், தேசிய மற்றும் ஆசிய அளவிலான போட்டிகள் மட்டுமில்லாமல் குளோபல் தேசிய சாதனை சான்றிதழ் பெற்றும் பல விருதுகள் வாங்கி குவித்து யூனிவர்செல் சாதனையாளர் புக் ஆப் ரிக்கார்டில் இடம் பெற்றும் இந்த மாதம் பிப்.24/25 ஆகிய தேதிகளில் நடைபெறும் உலக கோப்பைக்கான தேர்வில் பங்கு பெற தகுதி பெற்று இருக்கும் யோகா சாதனை சகோதரிகளுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள் பாராட்டு தென்காசி மாவட்டம் கடையம் அடுத்த இரவணசமுத்திரம் எனும் ஊரைச் சேர்ந்த மளிகை கடை ஊழியர் முகம்மது நஸீருதீன் – ஜலிலா அலி முன்னிஸா தம்பதியரின் மகள்கள் ஷாஜிதா ஜைனப் 5 ம் வகுப்பும் மிஸ்பா நூருல் ஹபிபா 12 ம் வகுப்பும் குற்றாலம் செய்யது பள்ளி குழுமத்தில் பயின்று வருகின்றனர்
இதில் மிஸ்பா 2016-2018 ஆம் ஆண்டு தாய்லாந்து பாங்காங்கில் நடைபெற்ற ஆசிய அளவிலான யோகா போட்டியில் இரு முறை தங்கம் வென்ற காரணமாக அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். மிஸ்பா பயிலும் பள்ளி நிர்வாகம் இவரது குடும்ப ஏழ்மை நிலை அறிந்து திறைமையை ஊக்குவிக்கும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் மேல்நிலைக்கல்வி வரை ஸ்காலர்சீப் வழங்கி உள்ளதால் இதே பள்ளியில் பயின்று வருகிறார் . தன் அக்காவை மிஞ்சும் அளவிற்கு ஷாஜிதாவும் யோகாவில் பல சாதனை சான்றிதழ் பெற்று கொண்டு வருகிறார்
இச்சகோதரிகள் போட்டிகள் மட்டுமில்லாமல் யோகா, ஸ்கேட்டிங் மூலம் பல சமூக விழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் இருவரும் வருகிற பிப்- 24/25 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் மாவட்டம் கோட்டூரில் யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்படும் 2024- உலக கோப்பைக்கான தேர்வில் இந்த சகோதரிகள் தகுதி பெற்று கலந்து கொள்ள இருக்கின்றனர்
இவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழக இளைஞர் நலக்கல்வித்துறை தலைவர் வேளாங்கண்ணி ஜோசப் ,கலை மற்றும் கலாச்சார துறைத்தலைவர் கே.ஏ.பாபு மற்றும் ஓய்வு பெற்ற துணை ஆட்சியரும் அண்ணா நூற்றாண்டு குடிமை பணிகள் பயிற்சி மைய பயிலக இயக்குனர் தெய்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றனர்.
இவர்கள் மிஸ்பாவிடம் தனது மருத்துவர் கனவை உறுதி படுத்திட கல்வியில் சிறந்து விளங்கி மேலும் மேலும் யோகா, ஸ்கேட்டிங்கில் சாதனை புரிந்து சிறந்து விளங்கி நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இருவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்று பாராட்டி இச்சகோதரிகளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசினை வழங்கினர்.
இந்நிகழ்வில் யோகா, ஸ்கேட்டிங் பயிற்சி ஆசிரியர் குரு கண்ணன் கலந்து கொண்டு இம்மாணவிகள் குடும்பத்தின் சார்பாகவும் தனது சார்பாகவும் பாராட்டிய அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டார்.