சகாதேவன் கிருஷ்ணகிரி செய்தியாளர்
அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58 .ஆவது ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 58,வது ஆண்டு விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர்.க. பிரேம்குமார் தலைமையில்
நடைபெற்றது இதில் உதவி ஆசிரியர் நடராஜ் மற்றும் மகாலட்சுமி உதவி தலைமை ஆசிரியர் வரவேற்புரை ஆற்றினார் . மகேஸ்வரி முதன்மை கல்வி அலுவலர் முன்னிலை வைத்தார்
இதில் மணிமேகலை மாவட்டக் கல்வி அலுவலர் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி இராமமூர்த்தி , முருகையன், தியாகு ஆசிரியர் , குட்டி (எ) கிருஷ்ணன் ஆசிரியர் , ஒன்றிய ஊராட்சி குழு உறுப்பினர் அமிர்தம் கருப்பண்ணன் மற்றும் SMC தலைவர் மற்றும் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆவத்துவாடி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், முருகேசன், தட்டரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ், உமா பாரத் சரவணன் மற்றும் ஆசிரியர்கள் கார்த்திக் ஆண்டறிக்கை வாசித்தார்
இதில் ஏராளமான பெற்றோர்கள் மாணவர்கள் மாணவிகள் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வில் பல்வேறு போட்டியில் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பரிசுகள் பெற்றுக் கொண்டனர். அகரம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கோப்பை மற்றும் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு சிவசக்தி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஏ சி சண்முகம் மாணவர்களை பாராட்டி கோப்பை வழங்கினார்.