நீலகிரி மாவட்டம் உதகை- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல் கூடலூர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் நடுரோட்டில் கவிழ்ந்ததால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.இதில் காரில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை.விபத்து நடந்த சாலை மிக குறுகலாகவும்,சீசன் நாட்களில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையிலும் இருந்து வருகிறது என்பதால் விபத்துகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இச்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையினை விபத்து ஏற்படா வண்ணம் விரிவாக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.