தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள
இணை பதிவாளருக்கு வாழ்த்து.
செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கம் சார்பில் புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள இணை பதிவாளருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள இணைபதிவாளர் வே.நந்தகுமார் அவர்களை தமிழ் நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ம.சங்கர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
வட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு ரேஷன் கடை பணியாளர்கள் இணைப் பதிவாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
மேலும் தமிழ் நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.ஆர்.அறிவுறுத்தின் படி சங்கத்தின் சார்பில் ரேஷன் கடை பணியாளர்கள் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இம்மனுவில் கோரிக்கைகள் விற்பனையாளர்களின் இபிஎப் பணத்தை வங்கியில் செலுத்துவது, நியாய விலை கடையில் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தருவது, சம்பளம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் 4,800 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளுக்கு எடையாளர் அமைத்துத் தருவது, குடோன்களில் இருந்து வரும் அரிசி மற்றும் சர்க்கரை அனைத்தும் எடை குறையாமல் நியாய விலை கடைக்கு வழங்கவும்,
மகளிர் நியாய விலைக் கடை நடத்தும் மகளிர் விற்பனையாளர்களை நிரந்தர பணியாளர்களாக பணி அமர்த்துவது, பணியில் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் சிற்றெழுத்தர்கள்பதவி உயர்வு பெரும் நிலையில் எழுத்தர்கள் டி.ஆர்.பி மூலம் பதவி வழங்கியதை மாற்றி அமைக்கவும், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் சார்பாக
மனு அளிக்கப்பட்டது.
இவற்றை பரிசீலனை செய்து நல்ல முடிவு எடுப்பதாக கூறியுள்ளார் இம்மனுவில் மாவட்ட கோரிக்கையை ஒவ்வொன்றாக நிறைவேற்றிடவும் மாநில கோரிக்கைளை பரிந்துரை செய்யவும் சங்கத்தின் சார்பில் கேட்டுக் கொண்டனர். அப்போது மாநில
துணை தலைவர் மதுராந்தகம் ம .சங்கர், மாநில மகளிர் அணி பொருளாளர் சிவகாமி, மாநில செயற்குழு உறுப்பினர் சபீனா, மாநில பொதுக்குழு உறுப்பினர் குணசுந்தரி, மற்றும் மகளிர் சுய
உதவிக் குழு பணியாளர்கள் உடன் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் இதில் ஒன்றிய நிர்வாகிகள் மதுராந்தகம், திருப்போரூர், அச்சிறுப்பாக்கம், லத்தூர், சித்தாமூர், ஒன்றிய நிர்வாகிகள் பலர்
கலந்து கொண்டனர்.