பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா வழுத்தூர் ஊராட்சி பூ கொல்லையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் செலவில் சிறு பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தினை சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா திறந்து வைத்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், திமுக(தெ) ஒன்றிய செயலாளர் நாசர், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ராமகிருஷ்ணன் துணைத் தலைவர் முகமது சாலிஹ்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் சுதா மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பாதுஷா, ரிபாய்,ஒன்றிய துணை செயலாளர்கள் கலியமூர்த்தி மணிமாறன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வன்,அறிவழகன் உட்பட ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.