தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
ஏழருவி செல்லும் அரசு பேருந்தில் கைப்பையை தவற விட்ட பெண். திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொம்மி குப்பம் ஊராட்சி ஏழருவி வரை T 2 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இன்று காலை 11 மணி அளவில் ப. முத்தம்பட்டி ஊராட்சி திப்ப சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சித்ரா வயது 44 என்ற பெண் தனது கைப்பையை பேருந்தில் தவறவிட்டார். இதை பேருந்தின் நடத்துனர் செந்தில் குமார் மற்றும் ஓட்டுனர் சதீஷ்குமார் ஆகிய இருவரும் அந்த கைப்பையை மீட்டு திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் சம்பந்தபட்ட பெண்ணை நேரில் அழைத்து அவர் தவற விட்ட கைப்பையை அவரிடம் ஒப்படைத்தனர். அந்த கைப்பையில் 5 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வீட்டு சாவி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.