பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ஸ்ரீ
சக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராபள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து ஆகம விதிப்படி யாகம் வளர்த்து மங்கள வாத்தியம் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ தேவநாயகி அம்பாளுக்கும் ஸ்ரீ சக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.