கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட குரும்பா சங்கத்தின் தலைவர் கல்பனா வேலுச்சாமி தலைமையில் குரும்பா சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து மனு ஒன்றை வழங்கி உள்ளனர்..
மனுவில் வழக்கறிஞர் பரமசிவம் என்பவர் குரும்பா சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் மிகவும் ஆபாசமாக பேசி அவற்றை வாட்சப் குழுவில் பதிவேற்றம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்..
தமிழகத்தில் குறிப்பிட்ட சமுதாய மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் வழக்கறிஞர் பரமசிவம் பேசியுள்ளதால்,தமிழகம் முழுவதும் குரும்பா சமுதாய மக்கள் புகார் மனுவை வழங்கி வருவதாகவும்,அதன் ஒரு பகுதியாக, குரும்பா சமுதாய மக்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள வழக்கறிஞர் பரமசிவம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனுவில் தெரிவித்துள்ளனர்…
மனு வழங்க கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு,கோவை மாவட்ட குரும்பா சங்க தலைவர் கல்பனா வேலுச்சாமி, பொருளாளர் கிருஷ்ணசாமி,செயலாளர் சுந்தர்ராஜன்,மற்றும் முன்னால்,இந்நாள் நிர்வாகிகள் பொன்னுச்சாமி,பொன்சுரேஷ்,மயிலை செந்தில் குமார்,பீடம்பள்ளி கணேசன்,சாய்ராம்,தேவராஜ்,ஏ.கே.ராஜ்குமார்,முருகேசன்,ராஜாமணி,குமார்,சண்முகம்,ராயப்பன்,மயில்சாமி,ஆறுச்சாமி,பழனிசாமி,கிருஷ்ணவேணி,சாந்தி,நல்லதம்பி,கெம்பனூர் ரவி,சதீஷ்,சபரி வாசன்,வடிவேலு,தேவராஜ்,சுப்ரமணி, நாகராஜ்,செல்வராஜ்,பட்டியப்பன்,ராமமூர்த்தி,குமார் உட்பட பலர் உடனிருந்தனர்..