பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கால்ஸ் டிஸ்டிலரீஸ் சர்க்கரை ஆலை முன்பு 440-வது நாளாக..
ஆலைக்கு வந்த டேங்கர் லாரியை மறித்து கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே திருமண்டகுடியில் அமைந்துள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிழுவைத் தொகை வழங்க வேண்டி, பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ஆம் தேதியிலிருந்து தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரும்பு விவசாயிகள் தங்களது போராட்டத்திற்கு பலன் ஏதும் இல்லாததால் மீண்டும் 440-வது நாளான இன்று ஆலையின் முன்பு கோஷங்கள் இட்டவாறு, ஆலைக்கு வந்த டேங்கர் லாரியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருஆருரான் புதிய நிர்வாகமான கால்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் சர்க்கரை ஆலையை திறப்பதாகச் சொல்லி, சாராய ஆலையை திறக்க முயற்சிப்பதை சர்க்கரைத்துறை ஆணையகம் மற்றும் தமிழக அரசு அனுமதி மறுத்து தடுத்து நிறுத்திட வேண்டும்.
திருஆரூரான் புதிய நிர்வாகம் விவசாயிகளிடம் பிராமண பத்திரத்தில் சட்ட விரோதமாக கையொப்பம் பெற்று வருவதை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேட்டி :
ராஜா,
குடந்தை ஒன்றிய செயலாளர்,
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம்..