திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள பாடகச்சேரியில் உள்ள ஸ்ரீ தேவி பூதேவி உடனாய கண்டுளம் மகிழ்ந்த பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழாவையொட்டி அனைத்து சன்னதியில் உள்ள மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மலர் அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடைமாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழா மண்டகப்படி உபயதாரர்கள் பாடகச்சேரி பொன்.சேகர், பொன்.பாஸ்கரன், பொன். ஸ்ரீதர் வாண்டையார் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *