திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2023-2024 -ம் ஆண்டின் ஆண்டு விழா கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் விரிவுரையாளர் பாலாஜி ஆண்டறிக்கை படித்தார். கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ் பேசுகையில், சோதனை காலங்களில் நல்ல நட்பு மட்டுமே கடைசி வரைக்கும் உறுதுணையாக தொடர முடியும் குறிப்பாக, மாணவர்கள் நற்பண்புகள், உடல் ஆரோக்கியம், நல்ல எண்ணங்களால் மட்டுமே முழுமையான வளர்ச்சிகள் அடைய முடியும் என்றார். வருகை பதிவேட்டில் 100% வருகை புரிந்துள்ள மாணவர்களுக்கும், வாரிய தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் சிறந்த மாணவர் விருது, விளையாட்டுப் போட்டி மற்றும் பேச்சு,கட்டுரை, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

முடிவில் உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞான ராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவில் அனைத்து பேராசிரியர்கள், சப்போர்ட்டிங் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *