பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 26-ஆம் ஆண்டு விழாவில்,
பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்..
சின்னத்திரை நடிகை டி.வி.புகழ் பரீனா ஆஸாத் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருபாலைத்துறையில் அமைந்துள்ள ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் மாணவ-மாணவிகளின் கோலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கும் வகையில் யோகா, உட்பட பல்வேறு போட்டிகளும், ஆடல் பாடல், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சின்னத்திரை டி.வி.புகழ் நடிகை பரீனா ஆஸாத் பங்கு பெற்று வாழ்த்துரை வழங்கி, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை கண்டு ரசித்தனர்.