ஊத்துமலையில் 2024 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு;-

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்
மகாலிங்கம் தலைமையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்,தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் தமிழக முதலவர்க்கு கோரிக்கை மனு;-

அவரது கோரிக்கை மனுவில் கூறியிருப்தாவது;-

தென்காசி மாவட்டம் வீகே புதூர் தாலுகா ஊத்துமலை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்கள் மழையை மட்டுமே நம்பி உள்ள கிராமமாகும்
இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழில் இங்கு வேறு எந்த தொழிலும் தொழில் சாலைகளும் இல்லை இக்கிராம மக்களின்50 ஆண்டு கால கோரிக்கையான இரைட்டை குளம் ஊத்துமலை கால்வாய் திட்டம்
பல முறை விவசாய சங்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளிக்கப்பட்டுஅதன் பயனாக 2019 ஆண்டு அப்போதைய ஆட்சியர் (திருநெல்வேலி) ஆகியோர் உத்தரவு பிறப்பித்தது அதன் படி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஊத்துமலை பெரிய குளத்தில் இருந்து இரைட்டை குளம் (குலையநேரி அருகில்) வரை ஆய்வு(விவசாய சங்க நிர்வாகிகள் உடன்) செய்யப்பட்டது அதன் பின் அதிகாரிகளால் லெவல் எடுக்கப்பட்டது. முந்தைய ஆட்சியில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல் எ திவிர முயற்சியில் ரூபாய் 7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மண் பரிசோதனை மற்றும் ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு (தற்போதைய ) 60 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது

அதன் பின் தற்போதைய அரசுநிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது மேலும் இத்திட்டம் நிறைவேறினால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இத்திட்டம் ஆய்வு செய்ததில் இருந்து தொடர்ந்து பல முறை புகார் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர மற்றும் விவசாயம் செய்ய இக்கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் இத்திட்டம் நிறைவேற்ற 19/02/2024 நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் இல்லையெனில் பயன்பெறும் 13 கிராம விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுஇணைந்து வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *