இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கும்பகோணம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யூசுப் அன்சாரி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.

மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாநில துணைத் தலைவர் தாவூது பாட்சா, மாவட்ட இணை பொருளாளர் ஜுல்பிகார் அலி, மாணவரணி மாநில செயலாளர் ஷபீக் அகமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் கமாலுதீன் பைஜி வரவேற்றார்.

மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் ஷாஜஹான் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் நமது மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிகளில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், ராமநாதபுரம் தொகுதியில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நிதி திரட்டுவது, கொடியேற்று விழா, குறித்தும் விளக்கி உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாசிச சக்திகளையும், அதற்கு துணை நின்றோரையும் வீழ்த்திடும் வகையில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது என்றும், வாக்கு பதிவு சதவீதத்தை உயர்த்தும் வகையில் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுப்பது என்றும்

மயிலாடுதுறை தொகுதி தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளராக மாநில செயலாளர் ஷாஜஹான், துணை ஒருங்கிணைப்பாளர்களாக மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மாநில துணைத் தலைவர் தாவூது பாட்சா, மாவட்ட தலைவர் முஹம்மது சுல்தான், மாவட்ட செயலாளர் கமாலுதீன் பைஜி, மாவட்ட இணைச் செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி, மாவட்ட பொருளாளர் ஜவ்ஹர் அலி, மாவட்ட துணை பொருளாளர் ஜுல்பிகார் அலி ஆகியோரை நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் மயிலாடுதுறை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 77வது நிறுவன தினவிழாவை முன்னிட்டு அனைத்து பிரைமரிகளிலும் கொடியேற்று விழாவை எழுச்சியுடன் நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட இணைச் செயலாளர் அப்துல் காசிம் ராஜாஜி நன்றியுரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *