சேத்தியாதோப்பு அருகே எறும்பூரில் பள்ளி வாசல் திறப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே எறும்பூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இஸ்லாமிய பெரியோர்கள், கிராமப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ஒற்றுமையோடு இணைந்து மஸ்ஜித் ஆயிஷா மற்றும் அரபிக் பாடசாலை எனும் புதிய பள்ளிவாசலை உருவாக்கிட முடிவு செய்யப்பட்டு, அதன் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. பின்னர் பணிகள் முடிவுற்றபின் அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் வருகை தந்த இஸ்லாமிய பெரியோர்கள் பள்ளிவாசல் மற்றும் அரபிக் பாடசாலையின் சிறப்புகளை எடுத்துரைத்தனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது புவனகிரியில் இருந்து விருத்தாசலம் செல்லும் வரை சுமார் 22 கிலோமீட்டர் தூரத்தில் இடையில் எங்குமே பள்ளிவாசல் மற்றும் அரபிக் பாடசாலை இல்லாததாலும், கிராமப்புறங்களில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு சிறப்பு தொழுகை, அரபிக் கல்வி கற்க முடியாத நிலை இருந்து வந்ததை போக்கும் வகையில் இந்த மஸ்ஜித் ஆயிஷா மற்றும் அரபிக் பாடசாலை எனும் புதிய பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த திறப்பு விழாவில் இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களுடன் கிராமப் பொதுமக்களும் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *