ஹா-பில்டு மற்றும் காரைக்கால் சத்சங்கம் இணைந்து மகளிர்க்கு யோகா மற்றும் பாராயணம் பயிற்சி.

பன்னாட்டு மகளிர் தினத்தை அனுசரிக்கும் விதமாக ஹா-பில்டு (Habuild) அமைப்பும் எல்.எஸ்.என் – வி.எஸ்.என் (விசுவாஸ்) சத்சங்கமும் இணைந்து நடத்திய யோகா பயிற்சிப் பட்டறை மற்றும் பாராயணம் நிகழ்ச்சி 10.03.2024 அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை காரைக்கால் மாவட்டம் நிரவி கிராமத்தில் காமராஜர் வீதியில் 18 ஆம் எண் கொண்ட இலக்கத்தில் நடைபெற்றுது. பெண்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர். திருமதி. நந்தினி ஆனந்த்குமார் ஒருங்கிணைத்தார். டாக்டர். எஸ்.ஆனந்த்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஹா பில்டு, அதாவது ஆங்கிலத்தில் Habuild (விரிவாக Habit Build, அப்படி என்றால் நல்ல பழக்கத்தை கட்டமைக்கும் அமைப்பு) என்று அழைக்கப்படும் அமைப்பானது யோகாவை பழக்கமாக ஆக்கும் நோக்கத்தில் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறது.

கரோனா தொற்று பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலக்கட்டத்தின் போது வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்களின் ஆரோக்கியம் கருதி இந்த அமைப்பு இணைய வழியில் விலை இல்லாமல் அளிக்கப்படும் யோக பயிற்சியை பார்த்தபடி கற்றுக்கொண்டு அதை பழக்கமாக மேற்கொள்ளும் முகாம்கள் நடத்தி கின்னஸ் சாதனை படைத்து இதுவரை சுமார் 92 நாடுகளில் 2 லட்சம் பங்கேற்பாளர்களை சென்றடைந்த இயக்கம் ஹா பில்டு நிருவனம்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரத்தில் அந்த அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. திரு. சவுரப் போத்ரா, செல்வி. திரிஷாலா போத்ரா, செல்வி. ஷீத்தல் புங்லியா மற்றும் திரு. அன்ஷூல் அகர்வால் ஆகியோர் அதன் நிறுவனர்கள். திரு. சவுரப் போத்ரா அரசு அங்கீகரித்த யோகா பயிற்றுனர் ஆவார்.

இந்நிலையில், கடந்த 08.03.2024 அன்று பன்னாட்டு மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதை அனுசரிக்கும் விதமாக ஹா-பில்டு அமைப்பு சார்பாக 10.03.2024 அன்று மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை உலகெங்கும் பல நாடுகளில் அந்த அமைப்பு யோக பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும் மகிழ்ச்சி நடன நிகழ்ச்சிகளை இணைய வழியில் நடத்தியது.

அந்த பன்னாட்டு நிகழ்வின் ஒரு அங்கமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம் நிரவி கிராமத்தில் அந்த அமைப்பின் ஆலோசனைப் படி யோக பயிற்சி நடை பெற்றது.

அதுமட்டுமின்றி, ஸ்ரீ விஷ்ணு சகசரநாம விஷ்வாஸ் நிலையத்தின் அங்கமான காரைக்கால் சத்சங்கத்தின் லலிதா சகசரநாமம் மற்றும் விஷ்ணு சகசரநாம பாராயணமும் நடைபெற்றது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. நித்தீஷ் அவர்களின் முயற்சியில் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

இந்த பயிற்சி பட்டறையை காரைக்கால் பகுதியை சேர்ந்த பல பெண்கள் பயன்படுத்திக்கொண்டனர்.

திருமதி. நந்தினி ஆனந்த்குமார் ஹா-பில்டு அமைப்பின் பிரதிநிதியாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

டாக்டர். எஸ். ஆனந்த்குமார் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முன்னதாக திருமதி. அமிர்த்தவல்லி மல்லிநாதன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் திருமதி. சத்தியா ஜெயசீலன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றியுரைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *