தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்ட19வது பொதுக்குழு கூட்டம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை வடக்கு மாவட்ட19வது பொதுக்குழு கும்பகோணம்
மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் ஜாபர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஷாகுல் மாவட்ட துணை தலைவர் சிக்கந்தர் அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அன்சாரி கலந்து கொண்டு பேசினார் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நேரத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,ஒன்றிய அரசின் மீது மிகப்பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

தன்னாட்சி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்தையும் ஒன்றிய பாஜக அரசு தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலை வெட்ட வெளிச்சாமாகி உள்ளது, மோடி அரசின் இந்த ஜனநாயக விரோதப்போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்.

ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு போன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத செயலை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த வர்கள் தான் செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் அணுகாமல் பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் எந்த மதத்தை சார்ந்த வர்களாக இருந்தாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்.

போதைப்பொருள் விற்பனையையும் பயன்பாட்டையும் இரும்பு கரம் கொண்டு அடக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை வேண்டும்.

தமிழக முஸ்லீம்களின் கோரிக்கையான இடஒதுக்கீட்டை அதிகரிக்கவும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்களுக்கு இடஒதுக்கீட்டில் நடக்கும் அநீதிக்கு உரிய தீர்வு செய்த தமிழக முதல்வர்க்கு பாராட்டி 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும்

வக்ப் வாரியத்தின் மூலமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய மாணவியருக்கு கல்வி உதவி வழங்கப்படும் அறிவிப்பை வரவேற்கிறோம்.

காசி, மதுரா அரசியல் பாபர் மசூதியை அடுத்து உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி மற்றும் மதுராவில் உள்ள ஷாஹி ஈத்ஹா பள்ளிவாசல்களை குறிவைத்து சங்பரிவாரத்தினர் பொய்ப் பிரச்சாரத்தை தீவிரமாக்கி உள்ளனர்.

சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வெறுப்புணர்வை பரப்புகின்றனர் என்றும்,

நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் மிண்ணனு வாக்கு இயந்திரத்தின் பதில் வாக்கு சீட்டு முறையை அமுல் படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட செயலாளர் முஹம்மது பாருக் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *