நெட்டுர் ஊராட்சியில்
சாலை திறந்து வைத்தும், புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்க விழாதென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெட்டூர் ஊராட்சியில்பல்வேறு பகுதிகளில்
.முடிவுற்ற சாலை பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி தொடக்க விழா
நடைபெற்றது.இந்த நிகழ்வில்தொழில் அதிபர் மணிகண்டன்
நெட்டூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவசுப்பிர மணியன்,ஊராட்சி செயலர் ஆறுமுகப் பாண்டியன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ் விழாவில் நெட்டூர் கவுன்சிலரும் ஆலங்குளம் ஒன்றிய சேர்மனும்மான எம் திவ்யா மணிகண்டன் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு நெட்டூர் ஊராட்சியில் உள்ள சாலைத் தெரு,அண்ணா தெரு,சாலை கோவில் தெரு, பாரதியார் தெரு, அம்மன் கோவில் தெரு, 2 -வது வார்டு வடக்கு தெரு , மாதா கோவில் தெரு, இலந்த மரத்து கோவில் தெரு,அப்புரானந்த சுவாமி கோவில் தெரு,
குத்துக்கள் மாடசாமி கோவில் தெரு,காமராஜர் தெரு,
கிருஷ்ணன் கோவில் தெரு, உள்பட பல்வேறு பகுதிகளில்
.முடிவுற்ற சாலை பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்விழாவிற்கு வருகை தந்த எம் திவ்யா மணிகண்டனுக்கு மேளதாளம் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.இந்த விழா நெட்டூர் கிராமமே விழாக் கோலமாக இருந்தது.

இந்த நிகழ்வில் நெட்டூர் திமுக,
கிளை கழக செயலாளர் பால் கணேசன், பாக்கியம், பழனியப்பன்,
வார்டு உறுப்பினர்கள் இசக்கியப்பன்,
கலாதேவி, பிரேமா , சுப்பிரமணியன், முன்னாள்
காவல் ஆய்வாளர்
சங்கர், முத்தையா , பால் மாரியப்பன்,
கணேசன், செல்வநாயகம், பரமானந்த சுவாமி,பஞ்சாயத்து அலுவலக உதவியாளர்கள்தன லெட்சுமி,இசக்கி ராணி,
உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
ஒன்றிய சேர்மன் தலைமையில் நெட்டூர் ராஜன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *