பாபநாசம் அருகே சொகுசு
காரின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து ஓட்டுனர் உயிரிழப்பு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி பின்னியம் பகுதியை சேர்ந்த உறவினர்கள் 5 பேர் சொந்தக்காரில் திருநள்ளாறு, சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லால்குடிக்கு செல்லும் பொழுது தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வடசருக்கை மெயின் ரோட்டில் எதிர்பாராத விதமாக காரின் முன் புற டயர் வெடித்ததில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது .இதில் கார் ஓட்டுநர் லால்குடி பின்னியம் பகுதியைச் சேர்ந்த ஆதவன் 24 என்பவர்க்கு பலத்த காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த லால்குடி பின்னியம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் வயது 24 , சிந்து வயது 21, முத்தம்மாள் வயது 56, தமிழ் வயது 23, ஆகிய நான்கு நபர்களும் உயிர்க்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாபநாசம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்

பாபநாசம் அருகே சொகுசு
காரின் டயர் வெடித்து மரத்தில் மோதி விபத்து ஓட்டுனர் உயிரிழப்பு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி பின்னியம் பகுதியை சேர்ந்த உறவினர்கள் 5 பேர் சொந்தக்காரில் திருநள்ளாறு, சனீஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் லால்குடிக்கு செல்லும் பொழுது தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள வடசருக்கை மெயின் ரோட்டில் எதிர்பாராத விதமாக காரின் முன் புற டயர் வெடித்ததில் சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது .இதில் கார் ஓட்டுநர் லால்குடி பின்னியம் பகுதியைச் சேர்ந்த ஆதவன் 24 என்பவர்க்கு பலத்த காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காரில் பயணம் செய்த லால்குடி பின்னியம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் வயது 24 , சிந்து வயது 21, முத்தம்மாள் வயது 56, தமிழ் வயது 23, ஆகிய நான்கு நபர்களும் உயிர்க்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *