அலங்காநல்லூர்.

மதுரை மாவட்டம் வலையப்பட்டியில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஞ்சமலை அய்யனார் திருக்கோவிலில் தேனி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் சுவாமி தரிசனம் செய்தார்

முன்னதாக வருகை தந்த அவருக்கு திமுக நிர்வாகிகள் அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், தலைமையில் வரவேற்பு அளித்தனர் அதனை தொடர்ந்து மஞ்சமலை அய்யனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

அப்போது அவர் கூறியது அதிமுக 3 அணிகளாக உள்ளது எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரன் அணி, என பல்வேறு பிரிவுகளாக உள்ளது ஓபிஎஸ் தேனியில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டு இருக்க வேண்டும் ஆனால் அவர் பயந்து கொண்டு ராமநாதபுரம் சென்று விட்டார்
டிடிவி தினகரன் இப்பொழுது தேனியில் வேட்பாளராக பாரதி ஜனதாவிடம் சீட் பெற்று வந்து நிற்கிறார்

அவர் மக்களுக்கு நிறைய செய்ததாக கூறுகின்றனர் ஆனால் என்ன செய்தார் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் அண்ணன் ஸ்டாலின், அவர்கள் திட்டங்களால் இந்தியாவே பெருமைப்படும் அளவுக்கு மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பேருந்தில் மகளிருக்கு இலவசம் உள்ளிட்ட திட்டங்களால் மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் நமது திமுக ஆட்சியின் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்தார்..

இதில் திமுக வடக்கு மாவட்ட அவை தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், நகர செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய துணைச் சேர்மன் சங்கீதாமணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரிகோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், வாடிப்பட்டிபால்பாண்டி, பேரூராட்சி துணைத் தலைவர்கள் சுவாமிநாதன் வழக்கறிஞர் கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் தண்டலை சரவணன், தங்கதுரை, மாவட்டத் துணை அமைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன் பிரதாப், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர் மற்றும் நிர்வாகிகள் பங்களா மூர்த்தி முன்னாள் பேரூர் செயலாளர்பிரகாஷ் ஊராட்சி மன்ற தலைவர்கள் காயத்ரி இதயச்சந்திரன், செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி, ஒப்பந்தக்காரர் கண்ணன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, தனிச்சியம் மருது, சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், வட்டாரத் தலைவர் சுப்பாராயலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குமரேசன், மாவட்ட நிர்வாகி அலெக்ஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்
சிந்தனைவளவன், தமிழ் புலிகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் சிங்கப்பாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *