பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்..

தொகுதி முழுவதிலும் இருந்து 50-ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு உண்டான இலக்கு அறிவிப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டை தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சியின் ஒன்றிய தலைவர் சசி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சாமானிய மக்களுக்காக ஜாதி மதம் கடந்து தமிழக வெற்றிக்கழகம் செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்திலேயே பாபநாசம் தொகுதியில் 50-ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களை இணைத்து, தமிழகத்திற்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்ற இலக்கு அறிவிப்பதாகும், வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை பாபநாசம் தொகுதியில் போட்டியிட வைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் எனவும் பேசினர். ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *