மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு கட்டணச் சீட்டுகள் ஏப்.9-ல் முன்பதிவு தொடக்கம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்று தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற 9-ம்தேதி முதல் ரூ.500, ரூ.200 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

இது குறித்து மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்தி:
புகழ் பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா வருகிற 11-ம் தேதி முதல் வருகிற 23-ம் தேதி வரை நடை பெற உள்ளது.

முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் வருகிற 21-ம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 8.35 மணி முதல் காலை 8.59-க்குள் நடைபெறவுள்ளது.

திருக்கல்யாணத்தில் பங்கேற்று தரிசிக்க விரும்பும் பக்தர்களின் ரூ.200, ரூ.500 செலுத்தி கட்டணச்சீட்டுகள் பெறவேண்டும். பக்தர்க ளின் வசதிக்காக இந்து சமய அறநிலையத் துறை இணையதளமான https://hree.tn.gov.in, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் இணை https://maduraimeenakshi.hree.tn.gov.in றில் வருகிற 9-ஆம் தேதி முதல் வருகிற 13-ஆம் தேதி இரவு 9 மணி வரை கட்டணச் சீட்டு பெற முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.500 கட்டணச்சீட்டில் ஒருவர் இரண்டு சீட்டுகளையும், ரூ.200 கட்டணச் சீட்டில் ஒருவர் மூன்று சீட்டுகளையும் பதிவு செய்ய முடியும். கட்டணச் சீட்டு பதிவுக்கு பிறந்த தேதி சரியாக நிறைவு செய்ய வேண்டும். ஒரு சீட்டுக்கு ஒரு கைப்பேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிறார்களை அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், பக்தர்களின் வசதிக்காக மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியிலும் கட்டணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டுகள் அதி களவில் பதிவு செய்யப்பட்டால், குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். அனுமதி பெற்றவர்களுக்கு வருகிற 14-ம் தேதி குறுந்தகவல் அனுப்பப்படும்.

திருக்கல்யாணத்துக்கு தேர்வு செய்யப்பட்டு, தகவல் கிடைக் கப் பெற்றவர்கள் வருகிற 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கு சித்திரை வீதியில் அமைந்துள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள நுழைவுக் கட்டணச் சீட்டு விற்பனை மையத்தில் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவலைக் காண்பித்து தொகையை ரொக்கமாகச் செலுத்தி கட்ட ணச் சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணச் சீட்டு பெற்றவர்கள் திருக்கல்யாணத்தன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *