தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளர் ஐ லியோனி தீவிர வாக்கு சேகரிப்பு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இந்தியா கூட்டணி கட்சி திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை ஆதரித்து பட்டிமன்ற பேச்சாளரும் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

போடி நகரின்  இதய பகுதியான வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை மற்றும் நகரின் பிரதான சாலைகளிலும் பேருந்து நிலையம் முன்பும் திறந்த வெளி வாகனத்தில் தேர்தல் பரப்புரையாற்றினார். பட்டிமன்ற பேச்சாளரான அவர் எப்போதும் போல் தனது நகைச்சுவையான பேச்சால் வாக்கு சேகரிப்பில் பொது மக்களை வெகுவாக கவர்ந்தார்.

உடன் நகரச் செயலாளர் புருஷோத்தமன் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினரும் போடி நகராட்சி நகர் மன்ற உறுப்பினருமான சங்கர் மற்றும் நகர திமுக நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *