மதுரை மாட்டுத்தாவணி. எம்..ஜி.ஆர்.
பஸ் ஸ்டாண்டில், பழுதடைந்த மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை

மதுரை மாட்டுத்தாவணி. எம்..ஜி.ஆர். பஸ் ஸ்டாண்டில், செயல்படாமல் இருக்கும் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி
எம். ஜி. ஆர். பஸ்-ஸ்டாண்டிற்கு, தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகளின் வசதிக்காகவும், பாலித்தீன் பைகளின் பயன்பாட்டிறை ஒழித்து சூற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு தரப்பில் மாநிலம் முழுவதும் மீண்டும் மஞ் சப்பை என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதன் முலம் மஞ்சப்பையை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க, அவர்கள் அதிகம் கூடும், பேருந்து நிலையங்கள், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் முதல்பிளாட்பாரம் பகுதியில் ஒரு இயந்திரம் அமைக்கப்பட்டது.

இந்த இயந்திரம் பல நாட்கள் பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி வந்தது. இந்நிலையில், திடீரென இயந்திரம் பழுதடைந்த
நிலையில், கடந்த இரு மாதமாக காட்சிப்பொருளாக இருக்கின்றது.

பத்து ரூபாய் பணம் செலுத்தினால் மஞ்சப்பை வராமல் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தினமும் நிறைய பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

யாரும் கண்டு கொள்வாரில்லை…
இது குறித்து பஸ்-ஸ்டாண்ட் வட்டாரத்தில் சமூக ஆர்வலர் ஏசுராஜனிடம் கேட்டபோது, “இந்த இயந்திரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் தான் பராமரிக்க வேண்டும். மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவனத்திற்கு இயந்திரம் அமைக்க இடம் மட்டும் தான் கொடுக்கப் பட்டுள்ளது” என கூறினார். இந்த இயந்திரத்தை முறையாக பராமரித்து மீண்டும் மஞ்சப்பை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே பயணிகள் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *