பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் நடைபெற்ற அரசு பள்ளி ஆண்டு விழா. நிகழ்ச்சியில் சிறகடித்து ஆடிய சின்னஞ்சிறு குழந்தைகள்…

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவலஞ்சுழியில் அமைந்துள்ள முத்தம்மாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சின்னஞ்சிறு குழந்தைகளின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாடலுக்கு ஏற்றவாறு சிறுவர்கள் நடனம் ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

இதில் சிறப்பு விருந்தினராக திருவலஞ்சுழி ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *