அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேடு விளக்குத்தூண் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம் என பொதுக்கூட்டம் நடைபெற்றது

தொடர்ந்து தேனி பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர்
மதன்ஜெயபாலனை, ஆதரித்து மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சீமான், அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து மைக் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அவர் பேசியது திராவிடக் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாத்தான் மக்களை விஷம் கொடுத்துக் கொள்ளுவார்கள் ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சியில் திராவிடக் கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு மக்களை வாட்டி வதைக்கின்ற சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளதாக கூறினார்

சுங்கவரி கட்டணம் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளால் மக்களை பாதிப்படைய செய்தது எங்கு பார்த்தாலும் மதவெறித் தாக்குதல் என்ற பெயரில் மனிதனை மிருகத்தனமாக தாக்குவது தான் இவர்களது பத்தாண்டு சாதனை எனவும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பது பிடிக்காது தமிழகத்தில் தான் சிறப்பான ஜல்லிக்கட்டு காளைகள் வீடுகளில் பிள்ளைகளைப் போன்று வளர்க்கப்படுகின்றன ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதனை கண்டாலே பிடிப்பதில்லை அரசியல் மாற்றம் தேவை அது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்களால் தான் தர முடியும் மத்தியில் இருந்த காங்கிரசும் திமுகவும் சேர்ந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சேர்ந்து நமது சகோதர சகோதரிகளான இலங்கைத் தமிழர்களை ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்டோர்களை கொன்று குவித்தது கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ்தான் அன்றைய கூட்டணியில் இருந்த திமுக அதனை கண்டு கொள்ளவில்லை இன்று துடிக்கிறது மோடி அரசு 10 ஆண்டுகளா ஆட்சியில் இருந்து விட்டு இன்று வந்து கச்சத்தீவை நாங்கள் வந்தவுடன் மீட்டு த் தருவோம் என்று கூறுகின்றனர் 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு கோமாவில் படுத்து உறங்கியதா இது இந்த மாநிலத்தின் தலைவர் அண்ணாமலைக்கு தெரியாதா அரசியல் மாற்றம் தேவை அது எங்களால் தான் தர முடியும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் மைக் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் பாலமேடு பேரூர் செயலாளர் சந்துரூ, தலைமை தாங்கினார். சோழவந்தான் தொகுதி செயலாளர் சக்கரபாணி, தொகுதி தலைவர் சங்கிலிமுருகன், பொருளாளர் சதீஷ்குமார், துணை தலைவர் மயில்வாகனன் முன்னிலை வகித்தனர் மாநில கலை இலக்கியப் பண்பாடு பாசறை செயலாளர் ஐந்துகோவிலான், மற்றும் பாலமேடு நிர்வாகிகள் பாண்டியன், பூபதி, உள்பட மகளிரணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *