நாமக்கல் மாவட்டம்.
பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் காப்பு கட்டுதல் பூச்சாற்றுதல் கம்பம் நடுதல் ஆகியவற்றோடு திருவிழா வைபவம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் திருவிழா நடைபெற்றுவருகிறது தினமும் உற்சவர் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

வடிசோறு படைத்தல் முன்னதாக மூலவர் மாரியம்மனுக்கு 28 வகை மூலிகைகளால் ஆன அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

உற்சவர் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வேலூர் நகரின் முக்கிய வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அம்பாளுக்கு வடிசோறு படைத்தல் நிகழ்வை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து சாமிக்கு படையலிட்டு அதை ஆலயத்தில் கொண்டு வந்து அம்மனுக்கு படைப்பார்கள்.

சாமி திருவீதி உலாவிற்க்கு கிளம்பியதும் கோவில் சார்பில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் அக்னி சட்டியை தங்களது கைகளில் ஏந்தி முக்கிய வீதிகளின் வழியாக ஊர் சுற்றி விளையாடி கோவிலை வந்தடையும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டு சென்றனர்.

30.4.2024 நாளை கோவிலில்
பூ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெறுவதை யொட்டி பக்தர்கள் பூ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *