கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மலர் தூவி சிறப்பு செய்தல் விழா.

தமிழ்நாடு அரசு பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளான ஏப்ரல் 29 நாளை கவிஞர் தினமாக அறிவித்து அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

தமிழ்க்கவிஞர் நாளில். தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கபிலர் நினைவுத்தூணுக்கு மாலை அணிவிக்கு, மலர் தூவும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது.

திருக்கோவலூர் கோட்டாட்சியர் ஆர்.கண்ணன் விழாவிற்கு தலைமை வகித்து கபிலர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சித்ரா வரவேற்றார்.

கோவல் தமிழ்ச் சங்கத் தலைவர், சிங்கார உதியன், பண்பாட்டுக் கழகத் துணைத் தலைவர் தே.முருகன், பணி நிறைவு பெற்ற அரசுக் கல்லூரி முதல்வர் மு.ரவிச்சந்திரன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொல்லியல் துறை மாவட்ட அலுவலர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மோ.ரகுராமன், பண்பாட்டுக் கழக நிர்வாகிகள் தேவ ஆசைத்தம்பி, கா.பி.
சுப்பிரமணியன்,

கவிஞர்கள், அன்புநிலவன். வானவில் ஜெயக்குமார், அருள்நாதன் தங்கராசு, கவிநிலவன், கலைச் சித்தன், ஜெரால்டு பாஸ்கரன்,

தமிழறிஞர்கள் துரை மலையமான், ஜீவ , சீனுவாசன், தங்க விசுவநாதன், ரமேஷ் பாபு, நல்ல பன்னீர்செல்வம், குப்பனார், தேவிகாராணி, கு.வளர்மதிச் செல்வி, திருமாவளவன், தணிகாசலம், ஆசியோர் மலரஞ்சலி செய்து சிறப்பித்தனர்.

மற்றும் தமிழ் அமைப்பினர், புலவர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *