விக்கிரமங்கலம் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் பழதால் 15.நாள் மின் தடையால் 150.ஏக்கர் நெல்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயத்தால் விவசாயிகள் கவலை.!

சோழவந்தான்

விக்கிரமங்கலம் அருகே கொசவபட்டியில் மின்சார டிரான்ஸ்பார்மர் பழதடைந்து ஏற்பட்ட15.நாள் மின் தடையால் கிணற்று நீர் பாசனத்தில் நம்பி பயிரிட்ட 150.ஏக்கர் நெல்பயிர்கள் தண்ணீரின்றி வாடிகருகும் அபாய சூழல் நிலவுதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி கொசவபட்டி கிராமத்தில் உள்ள 150.க்கு மேற்பட்ட ஏக்கரில்
கண்மாய் பாசனத்தை நம்பி விவசாயிகள் நெல் பயிர்கள் பயிரிட்ட நிலையில் தற்போது கோடை வெயில் தாக்கத்தால் கண்மாய்களில் நீர் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டது

இதனால் இப்பகுதி விவசாயிகள் மின் மோட்டர் மூலம் கிணற்று நீரை கதிர் தள்ளி பால் பிடிக்கும் இளம் பருவத்தில் உள்ள நெல் பயிர்களுக்கு பாய்ச்சி வந்தனர்..இந்நிலையில் விக்கிரமங்கலம் துணை மின் நிலையம் பராமரிப்பில் கொசவபட்டி கிராமத்தில் உள்ள 100.கிலோ வாட் திறன் கொண்ட டடிரான்ஸ்பார்மர் தீடீறென்று பழதாகியதால் இப்பகுதி வீடுகள் மற்றும் விவசாய கிணறு மின் மோட்டர்களுக்கு மின்தடை ஏற்பட்டது.

இதையெடுத்து மின்வாரிய பணியாளர்கள் ஒன்றுக்குமேற்பட்ட 100.கேவி மற்றும் 63.கேவி மின் மாற்றிகளை மாற்றி அமைத்த நிலையிலும் ஒவ்வொன்றாக பழகிதால் 15.நாட்களுக்கு மேலாக இக்கிராமத்தில் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.மேலும் விவசாய மின் மோட்டர்களுக்கு இயக்கமுடியாத நிலை நீடித்து வரும் அவலநிலையால் இக்கிராமத்தை சுற்றி சுமார் 150.ஏக்கரில் பயிரிட்ட நெல்பயிர்கள் தண்ணீரின்றி வாடி கருகும் அபாயசூழல் நிலவி வருகின்றது .இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 30.ஆயிரம் கடன் வாங்கி நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இது குறித்து பெண் விவசாயி மூத்துலெட்சுமி கூறியபோது. முதலைகுளம் கண்மாய் பாசனத்தை நம்பி எனக்கு சொந்தமான 2.ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தேன். தற்போது கண்மாயில் தண்ணீர் வற்றியதால் மடைகளில் நீர் வெளியேற வில்லை இதனால் கிணற்றில் உள்ள மின் மோட்டர் மூலம் நெல் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சி வந்தநிலையில் கடந்த 15.முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் கோளாறு ஆனதால் இது வரை மின் சாரம் வரவில்லை இதனால் தண்ணீரின்றி நெல் பயிர்கள் வாடி கருகி நிலங்களில் விரிசல் அடைந்நு உள்ளது

இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு சூழல் உள்ளது.மேலும் குடியிருப்பு வீடுகளுக்கும் மின்சாரம் இல்லாமல் இரவு நேரங்களில் வெப்பம் தாங்க முடியாமல் தவிர்ப்புக்கு ஆளாகி வருகின்றோம் என வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விக்கிரமங்கலம் மின் உதவி பொறியாளர் பாலாஜி கூறியபோது. இப்பகுதிகளில் நாள் முழவது மும்முனை மின் சாரம் வினியோகம் செய்யப்பட்டு வரும்நிலையில் கொசவபட்டி கிராமத்தில் உள்ள 100.கிலோ வாட் மின் திறன்கொண்ட மின் மாற்றி திடீறென்று பழதடைந்தால் இதற்கு மாற்றாக புதிய 100.மற்றும் 63.கிலோவாட் திறன் கொண்ட இரண்டு மின் மாற்றிகளை பொருத்திய மாற்றி அமைத்த நிலையில் புதிய மின் மாற்றிகளும் பழதடைந்ததால் தற்போது குடியிருப்புகள்விவசாய மின் மோட்டர்களுக்கு என தனியாக புதிய மின் மாற்றிகள் பொருத்தும் பணிகள் விரைவாக நடந்து வருவதால் மின் சப்ளை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என. கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *