தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் மதிய வேளையில் குறிப்பாக 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை கொண்டு செல்லவும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக நிழலில் நிறுத்த வேண்டும். மேலும் அவற்றுக்கு அதிகமான அளவு தண்ணீர் குடிப்பதற்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள எதுவாக மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் இத்தகைய நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், நீர்மோர். ORS கரைசல், தர்பூசணி போன்றவை வழங்கப்படுகின்றன. மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சி களிலும் இத்தகைய நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் நோக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக
மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து
செல்ல இலவச ஆம்புலன்ஸ் எண் : 108-க்கு அழைக்கலாம். மேலும், அவசரகால தேவைகளுக்கு
மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண்: 1070 ஆகிய இலவசஅழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைப்பு.

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மதுரை மாவட்டத்தில் மதிய வேளையில் குறிப்பாக 11 மணி முதல் 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை கொண்டு செல்லவும். தாகம் எடுக்காவிடிலும் கூட போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக நிழலில் நிறுத்த வேண்டும்.

மேலும் அவற்றுக்கு அதிகமான அளவு தண்ணீர் குடிப்பதற்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள எதுவாக மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் பொதுமக்கள் நலனுக்காக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்க மாவட்ட ஆட்சியர் சங்கீதா அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் இத்தகைய நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், நீர்மோர். ORS கரைசல், தர்பூசணி போன்றவை வழங்கப்படுகின்றன.

மாவட்டத்திலுள்ள 429 ஊராட்சி களிலும் இத்தகைய நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் நோக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கம் அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக
மருத்துவரை அணுக வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து
செல்ல இலவச ஆம்புலன்ஸ் எண் : 108-க்கு அழைக்கலாம். மேலும், அவசரகால தேவைகளுக்கு
மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்: 1077 மற்றும் மாநில கட்டுப்பாட்டு அறை எண்: 1070 ஆகிய இலவசஅழைப்பு எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *