கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நகர வார்டு செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன்தலைமையில் நகர துணைச் செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நகரச்செயலாளர் ம.மயில்கணேசனுக்கு பூ மாலை, பணமாலை மற்றும் தலையில் கிரீடம் அணிவித்து கேக் வெட்டி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் மலர வைப்போம் என்று அனைவரும் சபதமேற்றனர்
அதைத்தொடர்ந்து அதிமுகவின் நாட்காட்டிகளை அனைவருக்கும் வழங்கிய நகரச்செயலாளர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஐடி விங்க் நகரச்செயலாளர் சண்முகம், இளைஞரணி நகரச்செயலாளர் சசிக்குமார், வார்டு செயலாளர்கள் எஸ்.கே.எஸ்.பாலு, பிரமோஸ், ராம் குமார், கேசவன், மூர்த்தி, கண்ணன், செல்லக்கண்ணு, சக்திவேல் பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், ஏடிபி தொழிற்சங்க கிளை செயலாளர் செந்துர்பாண்டி, தலைவர் முத்துக்குமார், நிர்வாகிகள் சோங், முருகையா மற்றும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி சிறப்பிக்கப்பட்டது