திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கோரிக்கடவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவில் அம்மாபட்டி என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் தலை இல்லாத உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற சிலர் எரிந்த நிலையில் இருந்த உடலைக் கண்டு, உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த எலும்புக்கூடை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
முன்னதாக எரிந்த நிலையில் உள்ள அந்த எலும்புக்கூடு ஆனா அல்லது பெண்ணா என தெரியவில்லை . மேலும் இந்த உடல் நான்கு நாட்கள் முன்பே எரிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி வேறு இடத்தில் கொலை செய்து உடலை இங்கு எடுத்து வந்து எரித்தனரா அல்லது இங்கேயே கொலை செய்து எரிக்கப்பட்டதா போன்ற பல கோணங்களில் கீரனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதனிடையே கோரிக்கடவு பகுதியில் கடந்த 2 நாட்களாக யாரும் இறக்கவில்லை எனவும் அந்த சுடுகாடு புதைப்பதற்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது..