செங்குன்றம் செய்தியாளர் மே. 18
கடந்த 15 ம் தேதி புழலில் சென்னை பெருநகர காவல் புழல் காவல் நிலைய காவல் சேவை மையம் ஜன்னல் ,கதவு கண்ணாடிகள் அடித்து நொறுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்
சென்னை புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம் ஜி ஆர் நகர் பகுதியில் காவல் சேவை மையம் அமைந்துள்ளது.
கடந்த 15 ம் தேதி இரவு போதையில் திரிந்த நபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த காவல் சேவை மையத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி பின்னர் அருகாமையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சரக்கு வாகனங்களின் முன்பக்க கண்ணாடிகளை அடித்து அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து நழுவினர்.
காலை இச்சம்பவம் பற்றி புழல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல் சேவை மையம் மற்றும் அருகில் உள்ள கார் மற்றும் சரக்கு வாகனங்களை பார்வையிட்டு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் , புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் சுற்றித்திரிந்த எம்ஜிஆர் நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த
யுனோஸ் ( வயது 22 ) என்ற இளைஞரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.