கம்பம் அருகே வாலிபர் மரணம் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனையில் கடும் வாக்குவாதம்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அந்தஸ்தில்‌ செயல்பட்டு வருகிறது

இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம் பிரிவு கண் சிகிச்சை பிரிவு பல் மருத்துவ சிகிச்சை பிரிவு ஆப்ரேஷன் தியேட்டர் ரத்தப் பரிசோதனை பிரிவு குழந்தைகள் மருத்துவ சிகிச்சை பிரிவு பொது மருத்துவம் பிரிவு அவசர சிகிச்சை பிரிவு பிரேத பரிசோதனை பிரிவு மட்டுமில்லாமல் மாவட்டத்தில் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையை காட்டிலும் குழந்தைகள் அதிகம் பிறக்கும் சீமா ங் சென்டர் செயல்பட்டு வருகிறது

இதனால் இந்த மருத்துவமனை 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு அதிகமான குழந்தை பிறப்பு நடைபெற்று வருகிறது

இந்த மருத்துவமனைக்கு கம்பம் மட்டும் இல்லாமல் இதில் சுற்றி உள்ள கிராமம் மற்றும் நம் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் இருந்தும் ஏழை எளிய வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட சிகிச்சைக்கு 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளியாகவும் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மருத்துவமனையில் 100 கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது இவ்வளவு வசதிகள் இருந்தும் கம்பம் அருகே உள்ள குள்ளப்பன் கவுண்டன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் மின்சார பாய்ந்து உயிரிழந்த நிலையில் உயிரற்ற உடலை பிரதே பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்

அங்கு பிரேத பரிசோதனை மருத்துவமனையில் வசதி இருந்தும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் கூறியதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கிருஷ்ணகுமார் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு வசதி இருந்தும் ஏன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புகிறீர்கள் இதற்கு என்ன காரணம் எனக்கூறி டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் இரவு நேரத்தில் கூட இத்தனை சிகிச்சை பிரிவுகள் வசதி இருந்தும் எதற்கெடுத்தாலும் வரும் நோயாளிகளை முதலுதவி சிகிச்சை அளித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது இங்கு பணி புரியும் டாக்டர்களின் வேலையாக உள்ளது

மட்டும் இல்லாமல் அவசர சிகிச்சை பிரிவில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதே இல்லை . உயிரைப் பறிக்கும் முக்கியமான இருதய நோய் மாரடைப்பு எதிர்பாராத விபத்துகளால் நடைபெறும் விலை மதிப்பற்ற மனித உயிரை காப்பாற்ற கூட இரவில் மருத்துவமனையில் டாக்டர்களால் இல்லாததாலும் கம்பம் அரசு மருத்துவமனையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால் அங்கு செல்வதற்குள் பல்வேறு விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பறிபோவது கம்பம் அரசு மருத்துவமனையில் அன்றாடும் நடக்கும் சாதாரண நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது

இது குறித்தும் கிராம மக்கள் டாக்டர்களிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது எனவே இரவு நேரத்தில் டாக்டர்களை பணிபுரிய நியமனம் செய்தும் பிரேத பரிசோதனை கம்பம் அரசு மருத்துவமனையில் செய்து தரவும் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பம் நகர மக்கள் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *