மக்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற பைக் – அப்பாச்சி ஆர்டிஆர் 160 வாகனத்தை தமிழகத்தில் அறிமுகம் செய்த டிவிஎஸ் நிறுவனம்…
உலகளவில் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் முன்னணி வகிக்கும் டிவிஎஸ் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்தை ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தி வருகிறது.இந்நிலையில் வாகன பிரியர்கள் அதிகம் விரும்பும் கருப்பு நிற வாகனத்தை டிவிஎஸ் நிறுவனம் இன்று தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் அதிகம் விரும்பும் அப்பாச்சி இருசக்கர வாகனத்தின் புதிய தயாரிப்பில் ஆர்டிஆர் 160 மற்றும் ஆர்டிஆர் 160 4வி எனும் கம்பீரமான புத்தம் புதிய கருப்பு நிற பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த அப்பாச்சி இருசக்கர வாகனத்தில் நவீன முறையிலான எல்இடி, டிஸ்க்,மற்றும் ஸ்போர்ட்ஸ்க்கு பயன்படுத்தும் விதமாகவும்,வெயில், மழை உள்ளிட்ட காலநிலைகளில் ஓட்டுவதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிமுக விழா கோவையில் நடைபெற்ற நிலையில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பிரிவின் வணிக தலைவர் சும்பிலி, மற்றும் டிவிஎஸ் மோட்டாரின் துணைத்தலைவர் யு.பி
பாண்டே கலந்து கொண்டனர்.