தென்காசி, மே – 25
கேரள மாநிலத்தில் திருடப்பட்ட நூற்றுக்கணக்கான பைக்குகளை ஆலங்குளத்தில் விற்பனை செய்த நிலையில் கேரள மாநில போலீசார் பைக்குகளை மீட்டதோடு இரண்டு பேர்களை கைது செய்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளி ஒருவரை கேரள போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து கொண்டே இருந்து வந்துள்ளது.இதுதொடர்பாக கேரள மாநிலம் கொல்லம் நகர போலீசருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. திருட்டு குறித்து கொல்லம் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவத்தை தடுக்க சிறப்பு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலை யில் சமீபத்தில் கொல்லம் இரயில் நிலைய பகுதியில் மீண்டும் ஒரு மோட்டார் சைக்கிள் காணாமல் போனதாக புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படை யில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியி ல் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கொல்லம் இரயில் நிலையத்தில் நிறுத்தியிரு ந்த அந்த மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் திருடிச்சென்ற காட்சிகள் காமிராவில் பதிவாகி இருந்தது.
இதனை ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கொல்லம் மாவட்டம் தட்டமால் பகுதியை சேர்ந்த அன்சாருதீன் மகன் அனாஸ் (வயது 35) என்பது தெரிய வந்தது . உடனே அவரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அனாஸ் தலைமையில் ஒரு பெரிய கும்பல் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும், திருடிய வற்றை தமிழகத்தில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணம் ஊருக்கு அருகில் உள்ள
பழைய இரும்பு கடைக்கு சரக்கு வாகனங்களில் கடத்தி கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் அந்த பணத்தை வைத்து சொகுசு வாழ்க்கை நடத்தியதும் விசாரணை யில் தெரியவந்தது.
இதையடுத்து அனாசை அழைத்துக்கொண்டு கேரள போலீசார் தென்கா சி மாவட்டத்திற்கு வந்தனர்.அங்கு கடையம் அருகே அனாஸ்க்கு மோட்டார் சைக்கிள்களை விற்றுக் கொடுத்த தெற்கு மடத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் கதிரேசன் (வயது 24)என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு திருட்டு மோட்டார் சைக்கிள்களை வாங்கிய அடைக்கலபட்டணத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் பழைய இரும்பு கடையில் போலீசார் சோதனை செய்தனர்.அப்போது அங்கு கேரளாவில் திருடியதாக புகார் கொடுக்கப்படட 100 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அங்கு இருப்பதை கண்டு பிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அனாஸ், கதிரேசன் இருவரையும் கைது செய்து கொல்லத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் திருடி வரப்பட்டமோட்டார் சைக்கிள்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பிரித்து பல மடங்கு லாபத்தில் விற்று பணம் சம்பாதித்த அடைக்கலப்பட்டணம் பழைய இரும்பு கடை உரிமையாளர் செல்வத்தை தீவிரமாக கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் அந்தக் கடையில் மேலும் கேரள மாநில பதிவு எண் கொண்ட ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் இருப்பதை கண்ட போலீசார் இவை அனைத்தும் திருடி வரப் பட்டதா என விசாரணை செய்வோம். அவைகள் திருடப்பட்டதாக இருந்தால் மீண்டும் இங்கு வந்து சோதனை செய்து அவற்றை மீட்போம் என கூறினர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .